வீணா விஜயன் பணப்பரிமாற்ற வழக்கு: பினராயி விஜயன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் பரிசீலனை! - Seithipunal
Seithipunal


கேரளாவைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல். (CMRL) நிறுவனம், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு மாதந்தோறும் ரூ.3 லட்சமும், ஆலோசனை கட்டணமாக ரூ.5 லட்சமும் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்ற விவகாரத்தில் பினராயி விஜயன், வீணா விஜயன் மற்றும் அவரது கணவர் முகமது ரியாஸ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பும் மேல்முறையீடும்
மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்த நிலையில், அமலாக்கத்துறையே இவ்வழக்கை விசாரிக்கலாம் எனக் கேரள உயர்நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டு, 3 பேர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பணித்தார். இதனை எதிர்த்து பினராயி விஜயன் உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தில் அவசர மனு மற்றும் அமலாக்கத்துறை சம்மன்
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவல்துறை அல்லது அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தடை கோரி, பினராயி விஜயன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பினராயி விஜயனுக்கு 80 வயதிற்கு மேல் ஆகிவிட்டதையும் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு தேவை என்பதையும் சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, விடுமுறைக் கால அமர்வை அமைத்து விசாரணையை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தது. இதனிடையே, அக்டோபர் 23-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் வரை அவகாசம் கோரப்படும் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Veena Vijayan Money Laundering Case Supreme Court Considers Urgent Hearing for Pinarayi Vijayan


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->