பறக்கும் மின்சார காரை அறிமுகப்படுத்தியது டெஸ்லா: பங்குகள் விலை கிடுகிடு உயர்வு!
Tesla Unveils Flying Electric Car Stock Prices Surge Following Successful Test
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் கார் நிகழ்ச்சியில் புதிய 'பறக்கும் மின்சார காரை' அறிமுகம் செய்துள்ளது. ராக்கெட் போன்ற த்ரஸ்டர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இக்காரில், 600 லிட்டர் அழுத்தப்பட்ட நைட்ரஜன் மற்றும் 10 த்ரஸ்டர்கள் உதவியுடன் வெற்றிகரமாகப் பறந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிக் காட்டப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட இந்த ரோட்ஸ்டர் காரின் தயாரிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில், தற்போது 2028-ஆம் ஆண்டு முதல் இதன் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்தச் சோதனைக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காரின் அதிகாரப்பூர்வ விலை வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் விலை 2,50,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா பங்கு விலையில் அதிரடி உயர்வு
இந்த ஆச்சரியமான மற்றும் வெற்றிகரமான பறக்கும் காரின் சோதனையைத் தொடர்ந்து, உலக பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளன. இதன் காரணமாக டெஸ்லாவின் பங்குகள் ஒரே நாளில் 5.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதற்கு முன்பு 360 டாலர்களுக்கு விற்பனையாகி வந்த டெஸ்லா பங்கு விலை, இந்த அதிரடி அறிவிப்பால் 382 டாலர்கள் வரை உயர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அதிநவீன தொழில்நுட்பப் பாய்ச்சல் உலகளாவிய வாகனத் துறையின் கவனத்தை மீண்டும் டெஸ்லா நிறுவனம் மீது திரும்பச் செய்துள்ளது.
English Summary
Tesla Unveils Flying Electric Car Stock Prices Surge Following Successful Test