இந்தி திரையுலகில் Hinduphobia; நெற்றியில் திலகம் வைப்பது அவ்வளவு பெரிய குற்றமா?; பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆதங்கம்..! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகில் மத அடையாளங்களையும் பாரம்பரிய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் மறைமுக வெறுப்பு நிலவுவதாக பிரபல தயாரிப்பாளர், பாலாஜி டெலிபிலிம்ஸ் தலைவர் ஏக்தா கபூர்  குற்றம் சுமத்தியுள்ளார்.

பாலிவுட் இயக்குனர் தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகை தமன்னா ஜோடியாக நடித்து உருவான 'தி வான்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள 'பிஹ்தா மா' வனதேவி கோயில் மற்றும் அடர்ந்த மர்மக் காட்டின் நாட்டுப்புறக் கதைகளை மையமாக வைத்து இந்த படம் உருவானது. இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான சில விமர்சனங்களைத் தாண்டி, முதல் வாரத்திலேயே ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ரூ.100 கோடி கிளப்பை நோக்கி செல்கிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு பேசிய பாலாஜி டெலிபிலிம்ஸ் தலைவர் ஏக்தா கபூர், சினிமா வட்டாரத்தில் ஊடுருவியுள்ள போலி நவீனத்துவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

அதாவது, ''பாலிவுட் திரையுலகில் குறிப்பிட்ட மத நம்பிக்கைகள் மீதான வெறுப்புணர்வு மிக ஆழமாகப் புரையோடிப்போயுள்ளது; அனிமேஷன் கற்பனை கதைகளை ஏற்கும் இவர்கள், நமது மண்ணின் நாட்டுப்புற மரபையும் நம்பிக்கையையும் பேசினால் டிவி சீரியல் போன்று இருப்பதாகக் கூறி ஒதுக்குகிறார்கள். 

சிறுவயதில் நான் நெற்றியில் திலகமும் கையில் புனிதக் கயிறும் கட்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு கிளப்புக்குச் சென்றபோது என்னை விநோதமான பிறவியைப் போலப் பார்த்து ஏளனம் செய்தனர்; நெற்றியில் திலகம் வைப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?'' என்று  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Producer Ekta Kapoor expresses concern over the rising animosity towards certain religious beliefs within the Bollywood film industry


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->