தலைக்கேறிய போதையில் சுயநினைன்றி சாலையில் கிடந்த அபூதாபி அரசு குடும்ப பெண்; 03 வயது குழைந்தையை நடுரோட்டில் தவிக்கவிட்ட கொடூரம்; லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
London court delivers a striking verdict in the case of an Abu Dhabi royal family woman found lying on the street while intoxicated
லண்டனில் போதை தலைக்கேறி குழந்தையை நடுத்தெருவில் தவிக்கவிட்டு மயங்கி விழுந்த அபுதாபி அரச குடும்பப் பெண் மஹ்ரா அல் நஹ்யானுக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி அரச குடும்பத்தில் திருமண பந்தத்தில் இருந்த மஹ்ரா அல் நஹ்யான் (32) என்பவருக்கு மாதம் தோறும் 8,000 பவுண்டுகள் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி மேற்கு லண்டன் பகுதியில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில், அளவுக்கு அதிகமாக கொகைன் போதைப் பொருளை எடுத்துக்கொண்டதால், போதை தலைக்கேறி, தன்னுடன் இருந்த 03 வயது குழந்தையைக் கவனிக்காமல் நடுத்தெருவில் சுயநினைவின்றி சுருண்டு விழுந்துள்ளார்.
அப்போது காலணிகள் கூட அணியாத அந்தப் குழந்தை, வாகனங்கள் செல்லும் பிரதான சாலையோரம் மிகவும் ஆபத்தான சூழலில் நின்றிருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக குழந்தையை மீட்டுப் பாதுகாத்துள்ளதோடு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டுள்ளனர். ஆனாலும், அரை மணி நேரத்திற்கும் மேலாக சுயநினைவின்றி கிடந்த அவர், கண் விழித்ததும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து குழந்தையைப் பராமரிக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும், வகையில் இருந்த குற்றத்திற்காக சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் மஹ்ரா அல் நஹ்யான் மீது வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கில், மஹ்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டீபன் வுல்லோ கேசி வாதிடுகையில்; இவர்(மஹ்ரா அல் நஹ்யான்) தனது மாபெரும் தவறை உணர்ந்து மிகவும் வருந்துகிறார். போதைப் பழக்கத்தின் பிடியில் இருந்து விடுபட தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்''என்று வாதிட்டார்.
இருப்பினும் வழக்கை விசாரித்த நீதிபதி, 03 வயது குழந்தையின் பாதுகாப்பைப் புறக்கணித்த கொடூர குற்றத்திற்காக மஹ்ரா அல் நஹ்யானுக்கு 6,114 பவுண்டுகள் அபராதம் விதித்ததுடன், போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி 02 ஆண்டுகள் சமூக நலப் பணிகளில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்றும் தீர்ப்பளித்த்துள்ளார். போதைக்கு அடிமையாகி அபுதாபி அரச குடும்பப் பெண் இவ்வாறு நாடு ரோட்டில் மயங்கி விழுந்த சம்பவம் சர்வதேச அளவில் பேசும் பொருளாகியுள்ளது.
English Summary
London court delivers a striking verdict in the case of an Abu Dhabi royal family woman found lying on the street while intoxicated