போதைப்பொருள் கடத்துவோர் கட்சிக்குள் வைத்துக்கொண்டு, பொதுவெளியில் போதைக்கு எதிராக மாரத்தான் ஓட்டமா..?; தவெக அரசை விமர்சித்துள்ள டிடிவி தினகரன்..! - Seithipunal
Seithipunal


''போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரைத் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, அவர்களுக்குப் பொறுப்புகளையும் வழங்கிவிட்டு, “போதையில்லாத தமிழகம்” என்ற பெயரில் மாரத்தான் ஓடுவதன் மூலம் போதைப்பொருளை ஒழித்துவிடலாம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயலாகும்.''என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாக, நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கத் தடுப்புப் படைகளை அமைத்து கண்காணிப்பதாகக் கூறிய முதலமைச்சர் விஜய் , முதலில் கண்காணிக்க வேண்டியது தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே என்பதைத் தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரைத் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, அவர்களுக்குப் பொறுப்புகளையும் வழங்கிவிட்டு, “போதையில்லாத தமிழகம்” என்ற பெயரில் மாரத்தான் ஓடுவதன் மூலம் போதைப்பொருளை ஒழித்துவிடலாம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயலாகும்.

எனவே, ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பாக, தனது கட்சியில் உள்ளவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு , தமிழகம் முழுவதும் பரவியுள்ள போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்'' என்று தினகரன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran has criticized the TVK questioning how they can organize a marathon against drugs while keeping drug traffickers within their own party


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->