ஜெம் வீரமணி வழக்கு: தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள போக்சோ நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


கிரானைட் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தன்னுடைய சொத்துகளை விற்ற வீரமணி, பல கோடி ரூபாய் தொகையை சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து புகாரை முடிக்க முயன்றதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இதையடுத்து, சொத்துகளை விற்றது மற்றும் அதற்கு உதவியதாகவும் பெரும் தொகை பெற்றதாகவும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் மீது காவல் துறை குற்றம் சுமத்தியுள்ளது.

விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. அப்போது அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்து. இதனையடுத்து, பிரகாஷ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தமக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு உள்ளதால், வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என பிரகாஷ், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத்தவ்டர்ந்து, குறித்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.பத்மா முன் விசாரணை வந்தது.

அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபுடுக்குமார் ராஜரத்தினம் வாதிடுகையில்; ''காவல் துறை கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள். மனுதராருக்கு எதிரான எந்தப் புகாரும் இல்லை. முகந்திரம் இல்லாத புகார் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளித்தார். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்.'' என வாதிட்டார்.

அடுத்ததாக, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா வாதிடுகையில்; ''விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போது முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும். இந்த வழக்கில் பல கோடி பணம் கை மாறியுள்ளது. எனவே, அது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.'' என்று வாதிட்டார். 

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.பத்மா இன்று தீர்ப்பளித்து கூறியதாவது;

''விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் பெரும் தொகை பணம் கைமாறி உள்ளது. இது குறித்து காவல் துறை விசாரணை நடத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கும் என்ற காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்று முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிடபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The POCSO court has dismissed the anticipatory bail plea of ​​businessman Prakash in the Gem Veeramani case


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->