பீஹார் அரசியலில் பெரும் புயல்; நிதிஷ் குமாருக்காக 9 கொலைகளைச் செய்ய வைத்தேன்; சொந்த கட்சி எல்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு.. - Seithipunal
Seithipunal


பீஹாரின் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மீது அவரது சொந்தக் கட்சி (ஜேடியு) எம்எல்ஏ  ஆனந்த் சிங், தான் நிதிஷ் குமாருக்காக 09 கொலைகளை தான் செய்ய வைத்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பீஹாரில் நடைபெறவுள்ள எம்எல்சி மேல் சபை தேர்தல் குறித்த மோதல் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிக்குள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், மொகாமா தொகுதி எம்எல்ஏவும், ஜேடியு கட்சியை சேர்ந்தவருமான ஆனந்த் சிங் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மீது அதிர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அதாவது, பீஹாரில் நிதிஷ் குமாரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்றும், கட்சிக்காகப் தான் பல தியாகங்களைச் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்தக் காலகட்டத்தில் அவருக்காக 09 கொலைகளைச் செய்ய வைத்தேன் என்றும், அதற்கான திட்டங்களை நான்தான் வகுத்தேன் என்றும் கூறியதோடு, இன்னும் நிதிஷ் குமார் மீது விசுவாசமாகவே உள்ளேன். அவரது ஆதரவாளன் நான், அவரை எதிர்த்து நான் சவால் விடுக்கவில்லை என்று பகீர் தகவலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அவருடன் உறுதுணையாக இருந்ததாகவும், கட்சிக்காக என்னைப் போலப் பல தியாகங்களைச் செய்தவர்கள் மிகச் சிலரே என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், எம்எல்சி தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வாகி உள்ள நீரஜ்குமார், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர். கருத்து வேறுபாடுகள் உள்ளவரை கட்சியின் வேட்பாளராக்கியது ஜேடியு செய்த தவறு என்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

பீஹாரின் குற்றப் பதிவு அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆனந்த் சிங், மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகி, சிறையிலும் இருந்துள்ளார்.

அவர், சிறையில் இருக்கும் போதும் தொகுதியில் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடாமல் தேர்தலில் வெற்றி பெற்றார். தனது வீட்டில் புலி, பாம்புகள் வளர்த்தும் சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது. நிதிஷ் குமார் குறித்து அவரது கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை பீஹார் அரசியலில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MLA from his own party makes sensational allegation that he was made to commit 9 murders for Nitish Kumar


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->