டெல்லியில் தடையை மீறி சிஜேபியின் 'மூவர்ண கொடி' போராட்டம்; அபிஜீத் திப்கே, நேஹா போரா தடுப்புக் காவலில் கைது..! - Seithipunal
Seithipunal


'மூவர்ணக் கொடி' போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் மாணவர் அமைப்புத் தலைவர் நேஹாரா போரா ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டெல்லி போலீசாரின் தடையை மீறி, சிஜேபி அறிவித்த,'மூவர்ணக் கொடி' போராட்டப் பேரணி தொடர்ந்து நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி,  சிஜேபி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (அக்.16) மாலை 05 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் 'மூவர்ணக் கொடி' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் தங்கி இருந்த என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் வீட்டில் இருந்து டெல்லி சென்ட்ரல் பார்க்கில் நடக்கும் போராட்டத்துக்கு கிளம்பிச் வந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேவை தடுத்து நிறுத்திய போலீஸார், அவரை அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அபிஜீத் திப்கே வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக, அபிஜீத் திப்கேவை அவர் தங்கி இருந்த இல்லத்தில் சந்தித்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், அவரிடம் இரண்டு நோட்டீஸ்களை வழங்கியுள்ளனர். ஒன்றில், சென்ட்ரல் பார்க் பகுதியில் கூடுவதற்கு தடை இருப்பதால் அவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இந்த 'மூவர்ணக் கொடி' போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஏஐஎஸ்ஏ அமைப்பினர், நேஹா போரா தலைமையில், டெல்லி மாண்டி ஹவுஸ் அருகில் இருந்து சென்ட்ரல் பார்க் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்திய போலீசார், நேஹா போராவைத் தடுப்புக் காவலில் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், குறித்த போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞகள் கூடியுள்ளதோடு, தடையை மீறி 'மூவர்ணக் கொடி' பேரணியும் தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abhijeet Dipke and Neha Porwal taken into preventive custody during the CJPs Tricolour protest in Delhi held in defiance of a ban


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->