'மூத்த குடிமக்​களுக்​கான ஆணை​யத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்'; வி.​ராம​ராவ் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


மூத்த குடிமக்​களுக்​கான ஆணை​யத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு மூத்த குடிமக்​கள் சங்க கூட்​டமைப்பு தலை​வர் வி.​ராம​ராவ் கோரிக்கை வைத்துள்ளார். 

இது குறித்து வி.​ராம​ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

''மூத்த குடிமக்​கள் சங்க கூட்​டமைப்பு மற்​றும் ஹெல்ப் ஏஜ் இந்​தியா ஆகியவை இணைந்​து, தமிழக மூத்த குடிமக்​கள் ஆணை​யம் ( Senior Citizens Commission of Tamil Nadu ) அமைக்க தமிழக அரசின் சமூக நலத்​துறையை வலி​யுறுத்​துகின்​றன.

புள்​ளி​விவரங்​கள் மற்​றும் திட்ட அமலாக்க அமைச்​சகத்​தின் அறிக்​கை​யின் படி, தமிழகத்​தில் 1.04 கோடி மூத்தகுடிமக்​கள் இருப்​பார்​கள் என்​றும், 2031-ஆம் ஆண்​டுக்​குள் இந்த எண்​ணிக்கை 1.42 கோடி​யாக உயரும் என்​றும் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

கேரள அரசு, மூத்த குடிமக்​களுக்​கான ஆணையம், மூத்த குடிமக்​களுக்கு தனி பட்​ஜெட் மூலம் நிதிஒதுக்​கீடு, மூத்த குடிமக்​களுக்​கான பிரத்​யேக​மான துறை ஆகிய​வற்றை வழங்​கி​யுள்​ளது.

எனவே, தமிழக அரசு, மூத்த குடிமக்​களுக்​கான ஆணை​யத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்'' என்று அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

V Rama Rao demands that the Tamil Nadu government take steps to set up a commission for senior citizens


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->