காஸ் ஸ்டேஷனில் திடீர் வெடிவிபத்து...! சிஎன்ஜி பைப் வெடித்து கார் ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் படுகாயம்...!
Sudden explosion gas station CNG pipe explodes car driver seriously injured bloodbath
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள சி.என்.ஜி. எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு நிரப்பும் குழாய் திடீரென வெடித்து சிதறியதில் ஊழியர் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர்.
கோரமங்களா பகுதியில் செயல்பட்டு வரும் சி.என்.ஜி. எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது காரில் எரிவாயு நிரப்புவதற்காக வந்திருந்தார்.

வழக்கம்போல் எரிவாயு நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென எரிவாயு நிரப்பும் குழாயில் அடைப்பு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எரிவாயு நிரப்பும் பணியில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்ய ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டுக் கொண்டிருந்த நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அந்த நேரத்தில், அதிகரித்த எரிவாயு அழுத்தத்தை தாங்க முடியாமல் குழாய் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து பல துண்டுகளாக சிதறியது.இந்த வெடிவிபத்தில் எரிவாயு நிலைய ஊழியர், கார் ஓட்டுநர் உள்ளிட்டோர் கடுமையாக காயமடைந்தனர்.
குறிப்பாக, கார் ஓட்டுநர் பலத்த காயத்தால் ரத்த வெள்ளத்தில் துடித்தபடி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்த அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கி, காயமடைந்த கார் ஓட்டுநரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கார் ஓட்டுநரின் கண்ணில் மிகக் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், பார்வை இழக்கும் அபாய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sudden explosion gas station CNG pipe explodes car driver seriously injured bloodbath