கிரிப்டோகரன்சி பெயரில் ரூ.17 லட்சம் அவுட்...! தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றிய 12 பேர் கொண்ட நெட்வொர்க் காலி...! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை என்ற பெயரில் ரூ.17½ லட்சம் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளை கும்பல் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் அரங்கேறிய இந்த கொள்ளை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் உள்பட 12 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.பெங்களூரு சஞ்சய்நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் விஸ்வாஸ்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், சொந்தமாக டீக்கடை ஒன்றை தொடங்கும் நோக்கில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

டைல்ஸ், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் டீக்கடைக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் முயற்சியில் இருந்தபோது, அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் ஜப்பானில் இருந்து பொருட்களை வாங்கினால் மிகவும் மலிவாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.இதனை முழுமையாக நம்பிய விஸ்வாஸ், பொருட்கள் வாங்க சம்மதம் தெரிவித்தார்.

பின்னர், ஜப்பானில் பொருட்கள் வாங்க இந்திய ரூபாயை கிரிப்டோகரன்சியாக மாற்ற வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டுள்ளது.அதன்படி, ரூ.17½ லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கிரிப்டோகரன்சியாக மாற்றுவதற்காக விஸ்வாஸ் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது, முன்கூட்டியே திட்டமிட்டு காத்திருந்த மர்ம கும்பல் திடீரென விஸ்வாஸை வழிமறித்து, அவரிடம் இருந்த பணத்தை மிரட்டி பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாஸ் உடனடியாக சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை அடையாளம் கண்ட காவலர்கள், காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 12 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.13½ லட்சம் ரொக்கம், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17 lakhs out name cryptocurrency network 12 people who cheated private company employee cleared


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->