Gen Z திமுக கூட்டம்; சமூக வலைதளங்களுக்கான ரீல் உருவாக்கும் பயிற்சி அமர்வுகள் மற்றும் மாதிரி சட்டப்பேரவை நடத்தப்பட்டது..! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று Gen Z திமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் பிரபலம் ஜூலி உட்பட ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். 

இன்றைய இளம் தலைமுறையினரிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொய் பிரச்சாரங்களை எவ்வாறு கண்டறிவது..? உண்மைத் தகவல்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது..? உள்ளிட்ட தலைப்புகளில் திமுக இளைஞரணி சார்பில் இந்த GENZ திமுக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று (ஜூன் 27) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டியதன் அவசியம் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு எளிதாக புரிய வைக்கும் வகையில் 'சூப்பர் பேரவை' என்ற பெயரில் மாதிரி சட்டப்பேரவை நடத்தப்பட்டது. இதில் சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் இளைஞர்கள் நகைச்சுவை மற்றும் அரசியல் நையாண்டி கலந்த விவாதத்தில் ஈடுபட்டனர். இதன் போது காவிரி நீர், மக்களின் அன்றாட பிரச்சனைகள், சட்டப்பேரவை விவாதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

அத்துடன், Reel vs Reality உள்ளிட்ட தலைப்புகளில் வினாடி-வினா, படத்தைப் பார்த்து கருத்து கூறுதல், சமூக வலைதளங்களுக்கான ரீல் உருவாக்கும் பயிற்சி, தகவல்களை சரிபார்க்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு அமர்வுகளும் நடைபெற்றன. 

மேலும், யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல், பகுத்தறிவோடு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' நூலை படிக்க வேண்டிய அவசியத்தையும், தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த பற்றும், மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்களும் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Training on creating reels for social media at Gen Z DMK meeting


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->