வெற்றிகரமாக முடிவடைந்த வெற்றிமாறனின் 'அரசன்' படத்தின் முக்கிய படப்பிடிப்பு..!
The main shoot of Vetrimaarans Arasan has been successfully completed
விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை 2' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் அரசன். இந்த படத்தில் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி காவல்துறை கதாபாத்திரத்தில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
'வட சென்னை' பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் முக்கியமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 'அரசன்' படத்தை தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 'அரசன்' படத்துடன் சேர்த்து 'ராஜன் வகையறா' படத்தின் படப்பிடிப்பையும் வெற்றிமாறன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'அரசன்' படப்பிடிப்பு நிறைவு தொடர்பாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், வெற்றிமாறன் சிம்பு மற்றும் குழுவினருடன் பேசிக்கொண்டிருக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படப்பிடிப்பு நிறைவு என கூறுகிறார். அதற்கு சிம்பு நன்றி தெரிவிக்கும் வகையிலான இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
English Summary
The main shoot of Vetrimaarans Arasan has been successfully completed