கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; மதிமுக முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 150 பேர் கூண்டோடு திமுகவில் தஞ்சம்..!
150 former MDMK state and district executives join DMK
மதிமுகவின் பொதுக்குழுக்க கூட்டம் நேற்று (27-ஆம் தேதி) அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு கொடுப்போம் என வைகோ அறிவித்தார். இந்நிலையில், மதிமுகவை சேர்ந்த முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த்துள்ளனர்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (28.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளான சிவகங்கை மாவட்டச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான புலவர் செ.செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான திருப்பரங்குன்றம் பொடா அழகுசுந்தரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சேகர், மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் தஞ்சாவூர் விடுதலைவேந்தன், தலைமைச் செயற்குகுழு முன்னாள் உறுப்பினர் டி.ஆர்.ஆர்.மதியழகன்;
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ம.ராஜகோபால், சாமளாபுரம் பேரூர்ச் செயலாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், பல்லடம் நகர்மன்ற துணைத் தலைவருமான நர்மதா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சாமிநாதன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக், பல்லடம் நகர துணைச் செயலாளர் ஜெகநாதன், பல்லடம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடேஷ்;
மற்றும் முன்னாள் நிர்வாகிகளான மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் புதுக்கோட்டை சதாசிவம், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் சிவகாசி மு.செல்வராஜ், திருப்பூர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன், நகரச் செயலாளர் எஸ்.கே.ரவிச்சந்திரன், ஆர்.எம்.எஸ்.சேகர், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் பாரதமணி, மதுரை மாவட்ட பொறியாளர் அணி சி.எல்.ராஜா.
சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்களான என்.ராமச்சந்திரன், ஏ.சி.முத்து, பி.சதாசிவம், இளைஞர் அணி வி.அருள்செல்வம், பி.கந்தசாமி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பொறியாளர் அணி கே.ரகுராமகிருஷ்ணன், பொன்னேரி பேரூர்ச் செயலாளர் மதிவாணன், மோகன், ஞானவேல்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆகாஷ்ராஜ், அத்துடன் பொடா அழகுசுந்தரம் ஏற்பாட்டில் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் ஏ.அன்பரசன் தலைமையில் 40 பேர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், பல்லடம் முத்துரத்தினம், தாராபுரம் கவின் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்'' எனத் திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
150 former MDMK state and district executives join DMK