“இரண்டு ஆண்டுகள் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டேன்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்கள் - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

அனுபமாவின் சினிமா பயணத்தைத் தாண்டி, கடந்த சில ஆண்டுகளாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் அவர் காதல் உறவில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, வெளிநாட்டு பயணங்களில் எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்டவை இந்தக் காதல் குறித்த பேச்சுகளுக்கு மேலும் வலு சேர்த்தன.

ஆனால், எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது கடந்தகால உறவு குறித்து அனுபமா பரமேஸ்வரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, அந்த உறவில் சுமார் இரண்டு ஆண்டுகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது முன்னாள் துணையிடமிருந்து ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ எனப்படும் மனரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டதாகவும், தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதல் தொடங்கிய சில நாட்களிலேயே தனது காதலர் தன்னை அவரது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தியதாகவும், அதன்பிறகு நிச்சயதார்த்தம் குறித்து பேசத் தொடங்கியதாகவும் அனுபமா கூறியுள்ளார். ஆனால், தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை எனக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“அப்போது நிச்சயதார்த்தம் செய்திருந்தால், அது திருமணத்தில் முடிந்து, பின்னர் விவாகரத்து வரை சென்றிருக்கக்கூடும்” என்ற வகையில் அனுபமா தனது அனுபவத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தனது திரைப்படத் தேர்வுகளிலும் முன்னாள் காதலர் தலையிடத் தொடங்கியதாகவும், அதன் காரணமாக சில திரைப்பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்திவிட்டு, அடுத்த நாளே முற்றிலும் மாறுபட்ட வகையில் நடந்து கொள்வது போன்ற அவரது நடவடிக்கைகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேட்டி வெளியானதைத் தொடர்ந்து, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அந்த வாரிசு நடிகர் தொடர்பான பழைய காதல் விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நடிகரை அன்ஃபாலோ செய்த அனுபமா, “இனிமேல் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே பேசுவேன். இதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. எந்த பயமும் இல்லை” என்ற கருத்தில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், திரைத்துறையில் தனக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நல்ல நண்பர் என்றால் அது நடிகர் துல்கர் சல்மான் தான் என்றும் அனுபமா தெரிவித்துள்ளார்.

‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு ‘சதமானம் பவதி’, ‘கார்த்திகேயா 2’, ‘டில்லு ஸ்கொயர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா, தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கடந்தகால உறவு குறித்த அவரது வெளிப்படையான பேச்சு தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I suffered physically and mentally for two years Shocking details shared by Anupama Parameswaran


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->