'சாத்தான்குளம் படுகொலை போல என்னை கொலை செய்து விடுங்கள்'; தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டு கதறும் ஜி.பி.முத்து; நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. அவர் சினிமாவில் 2கே லவ் ஸ்டோரி, ஓ மை கோஸ்ட், பகீரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எப்போதும் கலகலப்பாக பேச கூடிய அவர், அடிக்கடி காமெடியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதெற்கெனவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் வீடு கட்டி ஜி.பி.முத்து வசித்து வருகிறார். அந்த வீட்டின் நுழைவு வாயில் உள்ள பகுதியில் கோவில் கட்டுவது தொடர்பாக, ஜி.பி.முத்துவுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக, ஜி.பி.முத்து மற்றும் மற்றொரு தரப்பு மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனைக் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது? அவரது அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டார்களா? என்று பல்வேறு கேள்விகளைகேட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

இதையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்து  ஜி.பி.முத்து மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறையினர் தன்னை தினமும் அழைத்து விசாரிப்பதால் தானும், தனது மகள்களும் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ்-ஐ காவல்துறையினர் படுகொலை செய்தது போல், என்னையும் கொலை செய்துவிடுங்கள் என்றும், கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GP Muthu has put up a tearful tribute poster to himself


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->