மழை வேண்டி கோவையில் நடந்த ருசிகர சம்பவம்; கழுதைகளுக்கு தாலி கட்டி திருமணம்; திருமண விருந்தாக கம்பங்கூழ்..!
Donkeys tied to a thali and married in Coimbatore
கோவையில் உள்ள கிராமத்தில் ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன், 'பஞ்ச கல்யாணி' என்ற பாரம்பரிய நம்பிக்கையின்படி இரண்டு கழுதைகளுக்கு திருமணம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கிரமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு புடவை, வளையல், பாசி அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி மணமகள் போல் அலங்கரிக்கப்பட்டது. அடுத்து கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மேளதாளங்கள் முழங்க, பூஜைகள் நடத்தப்பட்டு பெண் கழுதைக்கு தாலி அணிவித்து திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மனமக்களான கழுதைகளுக்கு மறுவீடு அழைப்பும் நடத்தப்பட்டது. இந்த கழுத்தை திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது.
அதாவது, 'பஞ்ச கல்யாணி' பாரம்பரிய முறைப்படி, கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.
English Summary
Donkeys tied to a thali and married in Coimbatore