ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரகளை...! காவலரை கத்தியால் குத்திய நடிகை அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு எதிர்பாராத வன்முறையாக மாறியதில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் நடிகை அந்த்ரா பானர்ஜியை காவலர்கள் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் அந்த்ரா பானர்ஜி. இணையத் தொடர்களில் நடித்து வரும் இவர், கடந்த 12-ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் செல்வதற்காக ஆரவல்லி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணிப்பதற்காக நடிகை முன்பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ததாக தெரிகிறது. இதனால், அந்த இருக்கையை முன்பதிவு செய்திருந்த பயணிக்கும் நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் யாமினி காந்த் மிஸ்ராவுக்கும் நடிகைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில், நடிகை கத்தியால் உதவி ஆய்வாளரை குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் நடிகை அந்த்ரா பானர்ஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் ஏற்பட்ட சாதாரண முன்பதிவு தொடர்பான தகராறு, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கத்தியால் குத்தப்பட்ட சம்பவமாக மாறியது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aravalli Express train Actress arrested stabbing police with knife


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->