"அமுதன், தனுஷ் கொலை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்!": சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார் வலியுறுத்தல்!
PMK MLA Ganeshkumar Demands Judicial Probe by Retired Judge Into Murders of Amudhan and Dhanush
சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார் உரை: தொடரும் போதை & குற்றச் சம்பவங்கள்: கடந்த ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோ, அதேபோன்று தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கமும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வெளிப்படையான விசாரணை தேவை: இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் இனியும் தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரிக்கை: கோவை கல்லூரி மாணவர் அமுதன் மற்றும் சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவர் தனுஷ் ஆகியோரின் படுகொலைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதி அரசர் (நீதிபதி) ஒருவரை நியமித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார் பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK MLA Ganeshkumar Demands Judicial Probe by Retired Judge Into Murders of Amudhan and Dhanush