“ஒன்றரை வருடம் காதலித்தேன்.. பிறகு பிரிந்துவிட்டோம்!” – காதல் தோல்வி குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
I was in a relationship for a year and a half then we broke up Jason Sanjay opens up about his heartbreak
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், அவரது முதல் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், கல்லூரி காலத்தில் தான் சந்தித்த காதல் மற்றும் அதன்பிறகு ஏற்பட்ட பிரிவு குறித்து ஜேசன் சஞ்சய் மனம் திறந்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், சிறுவயதில் ‘வேட்டைக்காரன்’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் சிறிய அளவில் திரையில் தோன்றியிருந்தார். இதனால் எதிர்காலத்தில் அவரும் நடிகராக அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், ஜேசன் சஞ்சய் தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் வழியில் இயக்குநர் பாதையைத் தேர்வு செய்துள்ளார்.
சினிமா தொடர்பான படிப்பை வெளிநாட்டில் முடித்த ஜேசன் சஞ்சய், இயக்குநராக தனது முதல் படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ளார். ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், தமன் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சிக்மா’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் ரசிகர்களும் தளபதியின் மகன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படத்தை காண ஆர்வத்துடன் திரையரங்குகளுக்குச் சென்றனர். விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியல் களத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஜேசனின் திரையுலகப் பயணத்தை அவரது ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக கவனித்து வருகின்றனர்.
படத்தின் முதல் நாள் வரவேற்பைப் பொறுத்தவரை, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் வெற்றியை பெறவில்லை என்றாலும், ஜேசன் சஞ்சயின் மேக்கிங் மற்றும் காட்சியமைப்புகள் குறித்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அதேநேரத்தில் கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த படங்களில் இந்த அம்சங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக சென்னை கமலா திரையரங்கிற்கு தனது மகள் திவ்யா சாஷாவுடன் சங்கீதா வந்திருந்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமாக “அண்ணி, அண்ணி” என்று அழைக்க, சங்கீதாவும் அவர்களை நோக்கி கை அசைத்து பதிலளித்தார்.
இந்த நிலையில், பிரபல யூடியூபர் விஜே சித்து நடத்தும் ‘மொட்டை மாடி பார்ட்டி’ நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தான் காதலித்ததாக கூறிய ஜேசன் சஞ்சய், அந்த உறவு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் சுமூகமாகப் பேசி பிரிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
காதல் பிரிவுக்குப் பிறகு தான் யுவன் சங்கர் ராஜாவின் காதல் பாடல்களை அதிகமாகக் கேட்டதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தைக் கடந்து வந்த பிறகு, “வாழ்க்கையை பார்க்கலாம்” என்று முடிவு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநராக தனது முதல் படத்தை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ள இந்த காதல் அனுபவம் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் ‘சிக்மா’ படத்தின் வரவேற்பு குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தனது கல்லூரி கால காதல் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
I was in a relationship for a year and a half then we broke up Jason Sanjay opens up about his heartbreak