மருத்துவர் சத்திய சுந்தரி மறைவு; 'இயற்கைப் பாதுகாவலரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்'; ஸ்டாலின் பதிவு..! - Seithipunal
Seithipunal


பசுமைப் போராளியும், மருத்துவருமான சத்தியசுந்தரி அவர்கள் காலமாகியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;

''பசுமைப் போராளியும், சிறந்த மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரியின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். இயற்கையின் மடியில் மீளாத் துயில் கொள்ளும் அந்த இயற்கைப் பாதுகாவலரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1980-களில் பவானி ஆற்றைப் பாழாக்கிய விஸ்கோஸ் ஆலைக்கு எதிராக, எவ்வித மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் மக்களைத் திரட்டி அவர் நடத்திய சட்டப் போராட்டமும், களப் போராட்டமும் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த சத்தியசுந்தரி அம்மா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் - உறவினர்கள் - சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK leader condoles the passing of conservationist and doctor Sathya Sundari


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->