விரைவில் அனிருத் - காவ்யா மாறனுக்கு டும் டும் டும்; உறுதிப்படுத்திய YG மகேந்திரன்..!
YG Mahendran confirms Anirudh and Kavya Maran's wedding soon
இந்திய சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களில் அனைவரும் விருப்பமான இசையமைப்பாளராக திகழ்பவர் அனிருத். இவர் இசையில் முதல்வர் விஜய் முழுநேர அரசியலுக்கு வரும் முன்பு நடித்துள்ள ''ஜனநாயகன்'', ''தர்மன்'', லோகேஷ் - அல்லு அர்ஜுன் படம், ''ஜெயிலர் 2'', ''DC'' உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளன.
அனிருத் படத்திற்கு இசையமைப்பதுடன் வெளிநாடுகளில் பல்வேறு பெரிய இசை கச்சேரிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு நாடாக சென்று அனிருத் நடத்தும் கச்சேரிகள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகின்றன.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன் இருவரும் வெளிநாட்டு ஒன்றில் ஒன்றாக சுற்றிய புகைப்படமும் வெளியானது. ஆனால், அவை யாவும் வதந்திகள் என கூறப்பட்டது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் உறவினரும் பிரபல நடிகருமான YG மகேந்திரன், YouTube சேனல் ஒன்றில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடக்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து YG மகேந்திரன் கூறியுள்ளதாவது;
''அனிருத் மிகவும் சாதுவான பையன். அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும். நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் இதனை உறுதியாக சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விரைவில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
YG Mahendran confirms Anirudh and Kavya Maran's wedding soon