72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் 'அன்புடன் உங்கள் பாக்யராஜ்'; உடலை சுமந்த திரைபிரபலங்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் ஜாம்பவான், 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படும் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பாக்யராஜ் இல்லத்திலேயே அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

திரையுலகில் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என ஆல் ரவுண்டராக விளங்கியவர் இயக்குனர் கே.பாக்யராஜ். இவரது படங்களில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக திரையில் கொண்டு வருவதில் வல்லவராகத் திகழ்ந்த்தவர்.

'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 'மெளன கீதங்கள்', 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு' போன்ற காலத்தால் அழியாத வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். உடல்நிலை மோசமான நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின், நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்ட பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு, அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது நடிகர்கள், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலை சுமந்து சென்றனர். அவரின் இறுதி உலா வாகனத்தில் 'அன்புடன் உங்கள் பாக்யராஜ்' என்ற வாசகம் இடம்பெற்றது.

அத்துடன், எம்ஜிஆர் உடன் பாக்யராஜ் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றது. பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாக்யராஜ் உடன்  தகனம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Bhagyaraj bids farewell with state honours as 72 bullets rang out


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->