பெரியப்பாளையம் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal


பெரிய​பாளை​யம் அருகே உள்ள இறால் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தும் தனி​யார் நிறு​வனத்​தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் ஏற்​கெனவே 15 பேர் உயி​ரிழந்துள்ளனர். தற்போது மேலும் ஒரு பெண் தொழிலா​ளர் நேற்று உயி​ரிழந்துள்ள நிலையில், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வரும் கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது. இதில், ஓய்வு மற்​றும் பணி​யில் இருந்த 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். இதில் பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன.

வாயுக்கசிவால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். இதில், ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த 12 பெண்​கள், அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த 02 பெண்​கள், ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த ஒரு பெண் என, 15 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த கப்​பிட்டா ஜுவாங்கா என்ற 24 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another woman dies in Periyapalayam ammonia gas leak accident


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->