ஐபிஎஸ் அதி​காரி சீமா அகர்வாலின் பிரிவு உபசார நிகழ்ச்சி: 'பணி​யாற்​றி​ய அனைத்து துறையிலும் சிறப்​பான பங்​களிப்பை வழங்கினார்'; டிஜிபி மகேஷ்குமார் புகழாரம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்​நாடு தீயணைப்பு மற்​றும் மீட்​புப்​பணி​கள் துறை இயக்​குந​ராக உள்ள ஐபிஎஸ் அதி​காரி சீமா அகர்​வாலின் பணிக்​காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

ராஜஸ்​தான் மாநிலத்தைச் சேர்ந்த சீமா அகர்​வால், காவல்​துறை​யில் பல்​வேறு பொறுப்​பு​களில் 36 ஆண்​டு​கள் சிறப்​பாக பணி​யாற்​றி​யுள்​ளார். இவரது பணிக்​காலத்தை சிறப்​பிக்​கும் வகை​யில் தமிழக காவல்​துறை சார்​பில் சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இந்த விழாவில் டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், ஐபிஎஸ் அதி​காரி​கள், ஓய்​வு​பெற்ற ஐபிஎஸ் அதி​காரி ஏ.கே.​விஸ்​வ​நாதன், காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் கலந்​து​கொண்​டனர். விழாவில் சீமா அகர்​வாலுக்கு அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

இந்த பிரிவு உபசார நிகழ்ச்​சி​யில் டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசுகையில் கூறியதாவது;

சீமா அகர்​வால் மூத்த அதி​காரி மட்​டுமல்ல, அவரின் மனி​தாபி​மானமிக்க அணுகு​முறை அவரை உயர்ந்த இடத்​தில் நிறுத்​தி​யுள்​ளதாக புகழாரம் சூட்டினார். அத்துடன் எந்த பிரி​வில் பணி​யாற்​றி​னாலும் அதில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கு​வார் என்றும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றப்​பிரி​வில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்தவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், சீமா ரயில்வே ஐஜி​யாக இருந்​த​போது விபத்​துகளை தடுக்க அதிக நடவடிக்​கைகள் மேற்​கொண்​டதோடு, காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறை​களை சேர்ந்​தவர்​களாலும் மதிக்​கப்​பட்​ட​வர் என்று கூறினார்.

இவரை தொடர்ந்து சீமா அகர்​வால் பேசும்​போது கூறியத்தவது; சட்​டம் ஒழுங்கு மற்​றும் புல​னாய்வு பிரிவு அல்​லாமல் சிறப்பு பிரிவு​களில் பணி​யாற்​றும்​போது தனக்கு தெளி​வான பார்வை கிடைத்​ததாக தெரிவித்தார். அத்துடன், ''தற்​போது பணி​யில் உள்ள அதி​காரி​களுக்கு ஒன்றை கூற விரும்​பு​கிறேன். பாதிக்​கப்​படும் விளிம்​புநிலை மக்​களுக்கு உறு​துணை​யாக இருக்க முடி​யு​மா, பொது​மக்​களிடம் கனி​வாக இருக்க முடி​யுமா என்​பது குறித்து நீங்​களே உங்​களை ஆய்​வுக்கு உட்​படுத்தி மக்​களுக்கு சிறப்​பான சேவை​யாற்ற வேண்​டும்'' என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DGP Mahesh Kumar praises IPS officer Seema Agarwal for her outstanding contribution in all areas of her career


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->