மீண்டும் போர் பதற்றம்; சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது தாக்குதலுக்கு பதிலடி; 02-வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்..! - Seithipunal
Seithipunal


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் மீது இரண்டாவது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஓமன் நாட்டின் தாஹித் துறைமுகத்திற்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று ஹோர்முஸ் நீரிணை பகுதி உட்பட 10 இடங்களில் போர் விமானம் மூலம் அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரான் மீது இரண்டாவது நாளாக அமெரிக்கா வான்வழியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், சிரிக், பந்தர்-இ லெங்கே, கெஷ்ம் தீவு ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அத்துடன், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தளம் ஆகியவற்றின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் டிரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர ராணுவப் படை கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US strikes Iran for 2nd day in response to Singapore cargo ship attack


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->