பகீர் சம்பவம்...! தூக்கத்திலிருந்து எழுந்தபோது காணாமல் போன 5 வயது சிறுமி...! - கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்...!
incident 5 year old girl disappeared when she woke up from her sleep horror being found dead well
ராமநாதபுரம் எம்.எஸ்.பி நகர் பகுதியில், இரவு வீட்டில் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
எம்.எஸ்.பி நகரை சேர்ந்த 5 வயது சிறுமி, வழக்கம்போல் தனது பாட்டி அருகில் இரவு தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அதிகாலை எழுந்து பார்த்தபோது, சிறுமி படுக்கையில் இல்லாதது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியை அக்கம் பக்கத்திலுள்ள பகுதிகள் முழுவதும் தீவிரமாக தேடத் தொடங்கினர்.

நிலைமை கவலைக்கிடமாக மாறியதால் உடனடியாக காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, அருகிலிருந்த வீட்டுப் பகுதியிலுள்ள கிணற்றில் சிறுமியின் உடல் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் மற்றும் மீட்புக்குழுவினர், சிறுமியின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர்.பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாளா? அல்லது யாராவது கடத்திச் சென்று கொலை செய்து உடலை கிணற்றில் வீசியிருக்கிறார்களா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், அந்த பகுதியில் இரவு நேரங்களில் வெளிமாநில தொழிலாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இந்த மர்ம மரணம் தொடர்பான உண்மை விரைவில் வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
English Summary
incident 5 year old girl disappeared when she woke up from her sleep horror being found dead well