நொளம்பூரில் பயங்கரம்; லாரியில் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு; இளைஞர் கொலை; தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை நொளம்​பூர் பகுதியில் லாரியில் வரும் தண்ணீரை பிடித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒரு கொலை செய்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நொளம்​பூர் யூனியன் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் முரு​க​தாஸ் ​(50). இவர் தனது மனைவி செல்​வி, மகன்கள் சஞ்​சய் ​(25), சரத்​கு​மார் ​(27) ஆகியோ​ருடன் வசித்து வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு சரத் மற்​றும் சஞ்​சய் ஆகியோர் வீட்டினருகே லாரி​யில் தண்​ணீர் பிடித்​துக் கொண்​டு இருந்​துள்ளனர்.

அப்போது அங்கு வந்த அதே பகு​தி​யைச் சேர்ந்த உதயா என்​பவர் இவர்களுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இதில் சஞ்சய் மற்றும் சரத் ஆகிய இரு​வரும் உதயாவை கையால் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறிது நேரம் கழித்​து, உதயா தனது சகோதரர்கள் கார்த்​திக், ராகேஷ் மற்​றும் சில நண்​பர்​களு​டன் சஞ்சய் மற்​றும் சரத் ஆகியோரின் வீட்​டுக்​குள் புகுந்து இருவரையும் கத்​தி​யால் தாக்​கி​யுள்​ள்ளனர். தடுக்க வந்த முருகதாஸை​யும் கத்​தி​யால் தாக்​கி​விட்டு தப்​பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த காயமடைந்த 03 பேரும் கீழ்ப்​பாக்​கம் மருத்து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்பட்டுள்ளனர்.  ஆனால், செல்​லும் வழி​யிலேயே சஞ்​சய் உயி​ரிழந்​துள்ளார். சரத் மற்​றும் முரு​க​தாஸ் ஆகியோர் தற்போது சிகிச்சை பெற்று வரு​கின்றனர்.

இந்த சம்​பவம் குறித்து முரு​க​தாஸின் மனைவி செல்​வி, நொளம்பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்ளார். இதையடுத்து கொலை, கொலை முயற்சி உள்​ளிட்ட பிரிவு​களில்  உதயா மற்றும் அவருடன் வந்த கும்பல் மீது வழக்​குப்​ப​திவு செய்​துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பில், நொளம்​பூர் காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மை​யில் 03 தனிப்படைகள் அமைக்​கப்​பட்​டு, தீவிர தேடு​தல் பணி​யில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்றவாளியான ரூபேஷ் என்​பவரை பிடிக்​கும்​ போது, அவர் காவலர்​களை தாக்​கி​விட்டு தப்ப முயற்​சித்துள்ளார். இதனால் போலீஸார் தற்​காப்​புக்​காக ரூபேஷை கால் முட்​டி​யில் துப்பாக்கியால் சுட்​டுப் பிடித்​துள்ளனர்.

அத்துடன், இவ்​வழக்​கில் தொடர்​புடைய ஈஞ்​சம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த நவீன்​கு​மார் ​(24), மதுர​வாயல் பகு​தி​யைச் சேர்ந்த உதய​ராஜ் (21), சூர்​யா (20), கார்த்​திக் ராஜா (28), ராகேஷ் ராஜா (26), மேஷாக்​(22), சூர்​யபிர​காஷ் (27) ஆகியோரை​யும் கைது செய்​துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth killed in a dispute while collecting water from a lorry in Nolampur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->