போலியோ சொட்டுமருந்து முகாமை குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்..!
Chief Minister Vijay inaugurated the polio drop camp by administering drops to children
தமிழ்நாட்டில் 05 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து காலை 07 மணிக்கு தொடங்கி மாலை 05 மணி வரை வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த போலியோ சொட்டுமருந்துமுகாமை சென்னை பாலவாக்கத்தில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது.

இதில் 05 வயதிற்குட்பட்ட சுமார் 52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 05 வயதுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளியில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முதலமைச்சர் விஜய் இந்த முகாமை தொடங்கி வைத்துள்ளார். அப்போது போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு அழகிய பொம்மையை பரிசாக வழங்கினார்.

முன்னதாக இந்த மையங்கள் காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரை செயல்படும் என்றும், முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து முகாம்களிலும், அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் 02 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
English Summary
Chief Minister Vijay inaugurated the polio drop camp by administering drops to children