'ஓமலூர் போக வழி எது'...? - முகவரி கேட்பது போல் நடித்து மளிகைக் கடைப் பெண்ணிடம் 3.75 பவுன் தாலிப் பறிப்பு...!
Which way to go to Omalur 3 point75 pounds taliban snatched from grocery store woman by pretending ask address
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாலை நேரத்தில் நடந்த தாலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (38), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில், வீட்டு வாசலில் தெளிப்பதற்காக சாணம் எடுக்க ரேவதி தனது உறவினர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ஓமலூருக்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.
சந்தேகமின்றி அவர்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ரேவதியிடம் திடீரென அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், கணநேரத்தில் ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 3.75 பவுன் தாலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினர். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரேவதி கூச்சலிட்டார்.
இதுகுறித்து ஓமலூர் காவலர்களிடம் ரேவதி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தாலி பறித்து தப்பிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Which way to go to Omalur 3 point75 pounds taliban snatched from grocery store woman by pretending ask address