செங்குன்றம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி; 2.50 லட்சம் பெறுமதியான 1500 போதை மாத்திரைகளுடன் சிக்கிய பெண் கைது ; போலீசார் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


இன்று காலை செங்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், செங்குன்றம் பேருந்து நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு பெண் கையில் 02 பைகளுடன் நின்றிருப்பதை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அப்பெண்ணின் கைப்பைகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில், ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 1500 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துளளனர்.

பின்னர் போலீசார் குறித்த பெண்மணியிடம் விசாரணை செய்ததில், அவர் சென்னை பெரம்பூர், சோமசுந்தரம் 02வது தெருவை சேர்ந்த துர்கா (33) எனத் தெரிய வந்தது. அவர் மும்பையிலிருந்து விமானம் மூலமாக குறித்த போதை மாத்திரைகளை கொண்டு வந்ததாகவும், அவற்றை தனது ஆண் நண்பரான ஆட்டோ டிரைவர் ராஜி (32) என்பவர் வாங்கிவர சொன்னதாகவும் துர்கா தெரிவித்துள்ளார்.

உடனடியாக துர்காவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 1500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஆட்டோ டிரைவர் ராஜி மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரை கைது செய்தால்தான், இந்த போதை மாத்திரைகளை யார் எடுத்துவர சொன்னது, எங்கு எடுத்து செல்லப்படுகிறது என்ற தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman caught with 1500 narcotic pills at Red Hills Bus Terminal arrested


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->