சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்: மீறினால் கடும் நடவடிக்கை; சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு ..!
TASMAC shops to be closed tomorrow on Independence Day
நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது;
''வருகின்ற 15-ஆம் தேதி (நாளை) சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ)/ எப்எல்3(ஏஏ) முதல் எப்எல்11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
நாளை சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.''என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
TASMAC shops to be closed tomorrow on Independence Day