பகீர் சம்பவம்...! இளம்பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு பாலியல் அத்துமீறல்...! வாலிபரை மடக்கிப் பிடித்த காவலர்கள்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் காரமடை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.காரமடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில், அந்த வழியாக வந்த மர்ம நபர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, இளம்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்பாராத இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்த இளம்பெண் உடனடியாக கூச்சலிட்டு உதவி கோரினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டதும், சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் அந்த நபர் அங்கிருந்து வேகமாக தப்பியோடினார்.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காரமடை காவலர்களிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

மேலும், நடத்திய விசாரணையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் சிறுமுகை பகுதியை சேர்ந்த சரத் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் காரமடை பகுதியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young woman harassment while she alone police caught young man What happened


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->