அவதூறு பேச்சால் சிக்கிய அமைச்சர்...! ஆர்.எஸ்.எஸ். புகாரில் பிரியங்க் கார்கே மீது கிரிமினல் வழக்கு பதிய நீதிமன்றம் அதிரடி ஆணை....!
Minister caught defamation case RSS Court files criminal case against Priyank Kharge complaint orders action
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் முகமது நல்பாட் ஆகியோருக்கு எதிராக ஏ. தேஜாஸ் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு பெங்களூரு சிட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் ஆவணங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த நீதிபதி முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.
இந்த விசாரணையின் முடிவில், பிரியங்க் கார்கே மற்றும் முகமது நல்பாட் ஆகியோருக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் பிரிவு 356-ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய போதுமான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இருவருக்கும் சம்மன் அனுப்பவும் நீதிபதி ஆணையிட்டார்.இந்த வழக்கில் பிரியங்க் கார்கே முதல் குற்றவாளியாகவும், முகமது நல்பாட் மூன்றாவது குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதேசமயம், கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கருதியதால், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது.பிரியங்க் கார்கே மற்றும் முகமது நல்பாட் இருவரும் வருகிற ஜூலை 21-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற நடவடிக்கை கர்நாடக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
English Summary
Minister caught defamation case RSS Court files criminal case against Priyank Kharge complaint orders action