"ஐட்டம் பாடல் என்று சொல்லாதீர்கள்"!பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இல்லை – நடிகை தமன்னா கருத்து! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் தமன்னா பாட்டியா, திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை "ஐட்டம் பாடல்" என்று அழைப்பது குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தற்போது திரையுலகிலும், சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களில் நடித்த தமன்னா, ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவில் வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். அங்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், தற்போது மீண்டும் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற "காவாலா" பாடலில் அவரது நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக "புருஷன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் பாடல்களை "ஐட்டம் பாடல்" என்று குறிப்பிடுவது குறித்து தமன்னா தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "‘ஐட்டம் பாடல்’ என்று சொல்வதை நான் விரும்பவில்லை. அந்தச் சொல் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இல்லை. ஒரு பாடலுக்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். அந்த உழைப்பை ‘ஐட்டம்’ என்று குறிப்பிடுவது சரியான மரியாதையாக எனக்குத் தோன்றவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் பெண்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உழைப்பை மதிக்கும் வகையில் மொழிப் பயன்பாடு இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என தமன்னா வலியுறுத்தியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து, திரையுலகில் பெண்கள் குறித்த பார்வை மற்றும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donot call them item songs Actress Tamannaah opines that the term is disrespectful to women


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->