இன்று முதல் சென்னை எல்.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம்; விபரங்கள் உள்ளே..!
Traffic changes on Chennai LP Road from today
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, எல்.பி. சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி. - எம்.ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) சந்திப்பு வரை சாலை முழுவதுமாக மூடப்படவுள்ளது.
அடுத்ததாக, திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, முதல் அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையுமாறு மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பெசன்ட் நகரிலிருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள், மகாத்மா காந்தி சாலை, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, முதல் அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேப்போன்று, எல்.பி. சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள், சாஸ்திரி நகர் முதல் அவென்யூ, 11-வது குறுக்குச் சாலை, 8-வது குறுக்குச் சாலை, 10-வது குறுக்குச் சாலை வழியாக எம்.ஜி. சாலையை சென்றடையலாம்.
சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி ஒருவழிப் பாதையாகவும், 11-வது குறுக்குச் சாலை திருவான்மியூர் நோக்கி ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன், திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள், எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூ, முதல் பிரதான சாலை, முதல் அவென்யூ வழியாக இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பை சென்றடையலாம்.
மேலும், இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Traffic changes on Chennai LP Road from today