சென்னையில் 40 கிராம் கவரிங் நகை மற்றும் செல்போனை திருடிய இருவர் கைது..!
Two arrested for stealing 40 grams of covering jewelry and a cell phone in Chennai
சென்னை, அசோக் நகர் இந்திரா காலனி 04-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பிரபு சீனிவாஸ் (53). இவரது வீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், அவர் அண்ணா நகரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை புனரமைப்பு பணிகளை முடித்து தொழிலாளர்கள் சென்றுள்ளனர். மறுநாள் காலை மீண்டும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது பீரோவில் இருந்த சுமார் 40 கிராம் எடையுள்ள கவரிங் ஆரம், செல்போன் மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 06 பித்தளை பைப்புகள், குழாய்கள் ஆகியவை மர்ம நபர்களால் திருடி சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிரபு சீனிவாஸ் குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதன்படி இந்த திருட்டில் வடபழனி ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (20), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சதீஸ் குமார் (20) ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணைவிசாரணையில் இவர்கள் இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாக நள்ளிரவில் உள்ளே புகுந்து தங்க நகை என நினைத்து கவரிங் நகையை திருடியுள்ளதும், போகும்போது செல்போன் மற்றும் பித்தளை பைப்புகளை திருடிச் சென்றுள்ளனர். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Two arrested for stealing 40 grams of covering jewelry and a cell phone in Chennai