ஹிந்தி தெரியும்..ஆனா பேசமாட்டோம்.. கலைஞர்யோடு பயணம் செய்த அனுபவம்! ராதிகா சரத்குமார் ஓபனா அடிச்சிட்டாங்களே! - Seithipunal
Seithipunal


1980-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். ஹீரோயின் கதாபாத்திரங்களில் உச்சம் தொட்ட அவர், பின்னர் காலத்தின் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் தனித்த அடையாளத்தை உருவாக்கினார். இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் தாய் கிழவி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராதிகா, மீண்டும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மறைந்த மூத்த நடிகர் **எம்.ஆர்.ராதா**வின் மகளான ராதிகா, இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மெகா ஹிட் ஆன நிலையில், தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற அன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததுடன், தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டையும் உருவாக்கினார்.

கரியர் உச்சத்திற்குப் பிறகு கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தபோதும், அதைக் குறித்து கவலைப்படாமல் குணச்சித்திர வேடங்களைத் தேர்ந்தெடுத்தார் ராதிகா. கிழக்கு சீமையிலே, ஜீன்ஸ் போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. அதன் பின்னர் தர்மதுரை, நானும் ரௌடிதான் உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் மெகா பிளாக் பஸ்டர்களாக அமைந்து, இளம் தலைமுறை ரசிகர்களிடமும் அவரை மீண்டும் பிரபலமாக்கின.

தற்போது முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தாய் கிழவி படத்தில் ராதிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், வெளியான டீசரும் முதல் சிங்கிளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, இப்படத்தில் ராதிகா எடுத்துள்ள கெட்டப்பும் மேக்கப்பும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கெட்டப்புகளில் இந்திய சினிமாவின் “காட் ஃபாதர்” என அழைக்கப்படும் கமல்ஹாசனே, இந்த படத்தில் ராதிகாவின் தோற்றத்தை பாராட்டி தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்துக்காக ராதிகாவுக்கு விருதுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் திரைத்துறையினரிடையே உருவாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ராதிகா கூறிய கருத்துகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. ஹிந்தி மொழி குறித்து பேசிய அவர்,“நான் ஹிந்தியை சரளமாக பேசுவேன். எங்களால் பேச முடியும் தான். ஆனால் பேச மாட்டோம். கலைஞர் மு.கருணாநிதி யோடுபயணம் செய்த அனுபவம் காரணமாக, ஹிந்தி என்றாலே எனக்குள் ஒரு திரை வந்துவிடும் போல இருக்கிறது” என்று கூறினார்.

சினிமாவைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ள ராதிகா, தனது அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். நடிப்பு, கேரக்டர் தேர்வு, அரசியல் கருத்துகள் என எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசும் ராதிகா சரத்குமார், தாய் கிழவி படத்தின் மூலம் மீண்டும் ஒரு வலுவான மைல்கல்லை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I know Hindi but we donot speak i The experience of traveling with an artist Radhika Sarathkumar opened the door


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->