மேற்காசிய போருக்கு முடிவா...? 'யுரேனியம் ஒப்படைக்க ஈரான் ஒப்புதல்'...! - டிரம்ப் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்த நிலையில், இத்தகைய முன்னேற்றம் மேற்காசிய அரசியல் சூழலில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “அணு தொடர்பான பொருட்களை எங்களிடம் ஒப்படைக்க ஈரான் தயார் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் முக்கியமான ஒப்பந்தத்தை உருவாக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் சீராகும். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடல் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் நிலை ஏற்படும்” என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த அமைதி முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில், பாகிஸ்தானில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடந்தால், அந்த முக்கிய தருணத்தில் நேரில் பங்கேற்க நான் அந்த நாட்டிற்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு உருவாகி வரும் பேச்சுவார்த்தைகள், நீண்ட நாட்களாக பதற்றம் நிலவி வந்த மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியின் புதிய அத்தியாயத்தைத் திறக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Middle East war ove Iran agrees hand over uranium Trump announcement


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->