133 க்யூபிட் சக்தி…போஸ்டன்-சிங்கப்பூருக்கு ஈடாக அமராவதி: இந்தியாவின் முதல் குவான்டம் நகரம் பிறந்தது...! -ஜிதேந்திர சிங் பங்கேற்பு
133 qubits power Amaravati par Boston Singapore India first quantum city Jitendra Singh participates
நாட்டின் தொழில்நுட்ப வரலாற்றில் பொற்காலத்தைத் தொடங்கும் முக்கியமான நிகழ்வாக, இந்தியாவின் முதல் தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மைய கட்டிடத்திற்கு அமராவதியில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு இந்த வரலாற்று தருணத்தை சிறப்பித்தனர்.

‘அமராவதி குவான்டம் வாலி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையம், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கவுள்ளது.50 ஏக்கரில் உருவாகும் ‘டெக் நகரம்’ ஆந்திர அரசால் தூளூரு பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவில், உலகத் தரத்திலான குவான்டம் தொழில்நுட்ப மையம் உருவாகிறது. இது வெறும் கட்டிடம் அல்ல – இந்தியாவின் தேசிய குவான்டம் புரட்சியின் தொடக்கப்புள்ளி.நாட்டின் முதல் 133 க்யூபிட் குவான்டம் கம்ப்யூட்டரை அமராவதிக்கு கொண்டு வர, IBM, TCS, L&T உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
எதிர்கால தொழில்நுட்பங்களின் மையம்
இந்த மையத்தில் நடைபெறவுள்ள பணிகள்:
குவான்டம் கம்ப்யூட்டிங்
குவான்டம் தகவல் தொழில்நுட்பம்
குவான்டம் சென்சார்கள்
செயற்கை நுண்ணறிவு (AI)
சைபர் பாதுகாப்பு
ராணுவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகள்
கல்வி மற்றும் நிதித்துறை புதுமைகள்
இத்தகைய பல முன்னோடி ஆராய்ச்சிகளுக்கும் பரிசோதனைகளுக்கும் இது ஒரு அகில உலக ஆய்வு தளம் ஆக மாறும்.
இளைஞர்களுக்கு பொற்கால வாய்ப்பு
குவான்டம் வாலி உருவாகுவதால்:
உலகளாவிய முதலீடுகள் அதிகரிப்பு
ஸ்டார்ட்அப் எக்கோசிஸ்டம் வளர்ச்சி
ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி என ஆந்திர மாநிலம் ஒரு டெக் ஹப் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலக்கெடு நிர்ணயம்
ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டிடப்பணிகள் நிறைவடையவுள்ளன.
டிசம்பர் இறுதிக்குள் குவான்டம் கம்ப்யூட்டரை நிறுவுவது அரசின் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு உறுதி
“போஸ்டன், சிங்கப்பூர், ஷாங்காய் போன்ற உலக நகரங்களுக்கு ஈடாக, இனி இந்தியாவிலும் குவான்டம் தொழில்நுட்பத்தில் முன்னணியில் அமராவதி இருக்கும். இது நம் நாட்டின் டெக் எதிர்காலத்தை மாற்றும் மாபெரும் முயற்சி,” என்று பெருமையுடன் தெரிவித்தார்.
English Summary
133 qubits power Amaravati par Boston Singapore India first quantum city Jitendra Singh participates