பிக்பாஸ் 9 ரெட் கார்டு விவகாரம்: நானும், கம்ருதீனும் சேர்ந்துதான் பண்ணோம்..என் மீது ஏன் பழி போடுறீங்க?விஜே பார்வதி பேட்டி - Seithipunal
Seithipunal


Bigg Boss Tamil Season 9 நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில், டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வானாலும், ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டவர்கள் என்றால் விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் தான். இரண்டு பேரில் ஒருவரே டைட்டிலை கைப்பற்றுவார் என கணிக்கப்பட்ட நிலையில், சாண்ட்ராவை எட்டி உதைத்த சம்பவம் காரணமாக இருவருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறிய சூழலில், தற்போது விஜே பார்வதி அளித்துள்ள பேட்டி மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் 9-வது சீசனில் 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர் சமூக வலைதள இன்ஃபுளூயன்ஸர்களாக இருந்தாலும், திவ்யா கணேஷ், பிரஜின், சாண்ட்ரா உள்ளிட்ட சிலரே சின்னத்திரை மற்றும் திரைத்துறையில் அறிமுகமானவர்கள். இருப்பினும், அனைத்து போட்டியாளர்களும் நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்த முயன்றனர்.

இந்த சீசனில் அதிக சென்சேஷனை உருவாக்கிய ஜோடி விஜே பார்வதி – கம்ருதீன் தான். தொடக்கத்தில் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. ஆனால் நாளடைவில் நெருக்கமாகி, நட்பைத் தாண்டிய உறவாக அது மாறியது. தனியறைக்கு செல்வது, டபுள் மீனிங் பேச்சுகள், எல்லை மீறும் செயல்கள் என தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை நிகழ்ந்தது. இதற்கெல்லாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி நேரடியாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

போகப் போக அவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்த நிலையில், “டிக்கெட் டூ ஃபினாலே” டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்த சம்பவம் நடந்தது. இதனால் சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டதாக கூறப்பட்டு, அந்தச் சம்பவத்தின் அடிப்படையில் விஜே பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. இந்த முடிவை பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில், விஜே பார்வதி சமீபத்தில் அளித்த பேட்டியில், “பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியே வந்த பிறகும் சரி, நான்தான் கன்டென்ட். வெளியே வந்த பிறகு மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை பற்றி நான் தரக்குறைவாக பேசவில்லை. எனக்கு நடிக்க தெரியாது. அதனால்தான் வாழ்க்கை எனக்கு கடினமாக இருக்கிறது. நானும் கம்ருதீனும் சேர்ந்து தான் அந்த விஷயத்தை செய்தோம். ஆனால் பழியை மட்டும் ஏன் என் மேலே போடுகிறார்கள்? இது ரொம்ப பிற்போக்குத்தனமான சிந்தனை” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும், பார்வதியுடன் சேர்ந்ததே கம்ருதீனின் வீழ்ச்சிக்கு காரணம் என ஒரு தரப்பு கூறிய கருத்துகளையும், அதே தொனியில் திவ்யா கணேஷ் தெரிவித்திருந்த கருத்துகளையும் மறைமுகமாக அவர் விமர்சித்துள்ளார்.

இதன் மூலம், பிக்பாஸ் 9 முடிந்த பிறகும் விஜே பார்வதி – கம்ருதீன் ரெட் கார்டு விவகாரம் இன்னும் ஓயவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்த பேட்டி, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss 9 red card issue Kamruddin and I did it together why are you blaming me Vj Parvathy interview


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->