ரஜினிக்கு மகளாக நடிக்க மறுத்த வனிதா விஜயகுமார் – எந்தப் படத்தில் தெரியுமா?
Vanitha Vijayakumar refused to play Rajinikanth daughter do you know in which film
மூத்த நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள்களில் ஒருவரான வனிதா விஜயகுமார், 1990-களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர். நடிகர் **விஜய்**க்கு ஜோடியாக சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் நடித்த வனிதா, பின்னர் திடீரென சினிமாவிலிருந்து விலகி திருமண வாழ்க்கையில் செட்டிலானார். ஆனால் அந்த திருமணம் நீடிக்காமல் முறிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. அடுத்தடுத்து நடந்த திருமணங்களும் தோல்வியடைந்ததால், வனிதாவின் சொந்த வாழ்க்கை தொடர்ந்து பேசுபொருளாக மாறியது. இதன் காரணமாக குடும்பத்தினருடனும் நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டது. சண்டைகள், சர்ச்சைகள் என பெயர் பெற்ற வனிதா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்தார். அதிரடியான செயல்பாடுகள் பேசப்பட்டாலும், டைட்டிலை அவர் கைப்பற்ற முடியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வனிதா, இயக்குநர் அவதாரமும் எடுத்தார். ராபர்ட் மாஸ்டரை ஹீரோவாகவும், தன்னை ஹீரோயினாகவும் வைத்து Mrs & Mr என்ற படத்தை அவர் இயக்கினார். அந்தப் படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார். ஆனால் படம் கடும் தோல்வியை சந்தித்தது. தியேட்டர்களில் மட்டுமல்லாமல், எந்த ஓடிடி தளமும் அந்தப் படத்தை வாங்காததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த நடிகர் **ரஜினிகாந்த்**வரை அழைத்திருந்ததும் அப்போது பேசுபொருளானது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதா பகிர்ந்த தகவல் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில்,
“படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடிக்க முதலில் என்னைத்தான் அணுகினார்கள். ஆனால் அந்த கதாபாத்திரம் எனக்கு பிடிக்காததால், அந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகுதான் அந்த ரோல் என் தங்கைக்கு சென்றது. அந்தக் கதையை கேட்டபோது எனக்கு எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. ஒருவேளை ஹீரோயின் ரோலில் நடித்திருக்கச் சொன்னிருந்தால், நான் கண்டிப்பாக நடித்திருப்பேன்” என்று வெளிப்படையாக கூறினார்.
இந்த கருத்து, படையப்பா போன்ற மெகா ஹிட் படத்தில் நடித்த வாய்ப்பை வனிதா தவிர்த்தது குறித்து ரசிகர்களிடையே மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சினிமாவில் வாய்ப்புகள் இருந்தும், தனிப்பட்ட முடிவுகள் காரணமாக வனிதாவின் பயணம் வேறு பாதையில் சென்றது என்பதையே அவரது இந்த பேட்டி நினைவூட்டுவதாக உள்ளது.
English Summary
Vanitha Vijayakumar refused to play Rajinikanth daughter do you know in which film