அர்ஷ்தீப் சிங் அபாரம்; சொந்த மண்ணில் மும்பை அணியை நசுக்கிய பஞ்சாப் அணி; மும்பைக்கு தொடர் நான்கு தோல்விகள்..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் தொடரின் 24 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் 

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி  பெற்றது. முதலில் களமிறங்கிய ரிக்கில்டன், 02 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூரியகுமார் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

நமன்தீர் 50 ரன்களிலும், ஹர்திக் 14 ரன்களிலும், ரதப்போர்ட் 1 ரன்களிலும், திலக் வர்மா 08 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டி காக் 112 ரன்களில் இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் நிறைவில் மும்பை 06 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்து 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 80 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்து அபார வெற்றிபெற்றனர்.

அணியின் சார்பில் அர்ஷிதீப் சிங் 03 விக்கெட்டினை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் பஞ்சாபி அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்பை அணி 05 போட்டிகளில் விளையாடி 01 வெற்றியினை மட்டும் பெற்று 04 தோல்விகளை தழுவியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Punjab defeats Mumbai on home soil to secure a victory


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->