மேக்கப் போட்டு ஃபங்ஷனுக்கு போறே ? என் குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது ரங்கராஜ்..! ஜாய் வேதனை! - Seithipunal
Seithipunal


நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் கண்கலங்கிய நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜாய் கிரிசில்டா, அந்த வீடியோவில் “என் குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது ரங்கராஜ்” என்று கூறி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

கிரிசில்டா வெளியிட்ட அந்த வீடியோவில், “என் குழந்தை தற்போது ஐசியுவில் உள்ளது. ஆனால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், நீ மேக்கப் போட்டு ஃபங்ஷன்களுக்கு சென்று வருகிறாய். உன்னிடம் யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இந்த குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது ரங்கராஜ்,” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், “என்மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளாய். அதோடு டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுமதி வாங்கிவிட்டு வா. டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் ஏழு நாட்களில் முடிவு தெரிந்துவிடும். நீ என்னுடன் இரண்டு ஆண்டுகள் எப்படி வாழ்ந்தாய் என்று உனக்கே தெரியும். அதை நான் பொதுவெளியில் வெளிப்படுத்தினால் உனக்கே அவமானம் ஆகிவிடும் என்பதால் இதுவரை பொறுமையாக இருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் மிரட்டி திருமணம் செய்துகொண்டதாக ரங்கராஜ் கூறுகிறார். ஆனால் அவரது மனசாட்சிக்கு தெரியும் அது எவ்வளவு பொய் என்று. அவர் எனக்கு அனுப்பிய பல மெசேஜ்கள் என்னிடம் இருக்கின்றன. அந்த வீடியோக்களை குழந்தைகளிடம் காட்டினாலே கூட, ‘மாதம்பட்டி மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்’ என்று அவர்கள் சொல்வார்கள்,” என கிரிசில்டா கூறியுள்ளார்.

அவர் மேலும் குற்றஞ்சாட்டியதாவது, “மாதம்பட்டி ரங்கராஜ் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை திசை திருப்புகிறார். நான் எந்த காவல் நிலையத்திற்குப் போனாலும் அவர் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை மாற்றிவிடுகிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. யூடியூபர்களுக்கு பணம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைக்கிறார்,” என்றார்.

வீடியோவின் இறுதியில், உணர்ச்சிவசப்பட்ட கிரிசில்டா, “அது உன் குழந்தை இல்லாம யார் வீட்டு குழந்தை ரங்கராஜ்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. தற்போது கிரிசில்டா வெளியிட்டுள்ள புதிய வீடியோவால், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going to a function with makeup on My child curse wonot leave you alone Rangaraj Joy torment


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->