மத்திய கிழக்கு பதற்றம் தாக்கம்: யஷ் நடித்த ‘டாக்சிக்’ படம் வெளியீடு ஒத்திவைப்பு...! - Seithipunal
Seithipunal


மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராகிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவா பகுதியில் பரவலாக இருந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்ட அதிரடி த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களின் தனித்தனி போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை குவித்திருந்தன.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பல மொழிகளில் வெளியாகவிருந்த இப்படம் முதலில் இந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் உருவான போர் பதற்றம் மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது ‘டாக்சிக்’ ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், பெரிய திரையில் அதிரடி அனுபவத்தை காத்திருக்க வேண்டிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Middle East tension impact Yash starrer Toxic release postponed


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->