விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் திரிஷா செய்த வேலை.. பயில்வான் ரங்கநாதன் விளாசல்!
Trisha work amidst Vijay Sangeetha divorce controversy Paiilwan Ranganathan is furious
நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படும் நிலையில், இதுகுறித்து நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் போது விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் பயணம் செய்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு கோவாவிற்கும் இருவரும் சென்றதாகவும் கூறினார். மேலும், சமீபத்தில் உதய்பூர் அரண்மனையில் நடைபெற்றதாக கூறப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமண நிகழ்ச்சிக்கும் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் புகைப்படங்கள் வெளியே வரவில்லை என்றும், இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா விஜய்யுடன் எடுத்த செல்பியை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறினார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில் அந்த புகைப்படம் வெளியானது மேலும் விவாதங்களை தூண்டியதாக அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், “இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சிலர் இதற்கு அரசியல் காரணங்களை சொல்வது சரியானது அல்ல. இந்த விவகாரம் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விஷயம். இதனால் அவரின் புகழ் ஒரு அளவுக்கு பாதிக்கப்படலாம், ஆனால் அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு குறைவு” என்றும் அவர் கூறினார்.
இதேபோல், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை விஜய் தான் எடுக்க வேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமரசமாக தீர்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது விஜய்யின் முடிவில்தான் இருக்கிறது என்றும், சரியான முடிவு எடுக்கப்பட்டால் தற்போது நிலவி வரும் விவாதங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்தார்.
English Summary
Trisha work amidst Vijay Sangeetha divorce controversy Paiilwan Ranganathan is furious