சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி?ஜித் சொன்னதுக்கு ஓகே சொல்லிட்டாராம்! அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான புதிய தகவல்!
Is Shalini making a comeback to cinema She has reportedly agreed to Ajith suggestion
நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக உள்ளனர். இருவரும் இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படத்தின் போது காதலித்து, குடும்பங்களின் சம்மதத்துடன் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவிலிருந்து முழுமையாக விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திரைத்துறையின் வெளிச்சத்திலிருந்து விலகி இருந்தாலும், குடும்ப வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வரும் இவர்களின் வாழ்க்கை பலருக்கும் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஷாலினி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக அவர் களமிறங்கலாம் என்றே கூறப்படுகிறது.
அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவரது புதிய படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அஜித்தே தனது அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் படத்தில் நடிப்பதுடன் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்க இருப்பதால், அனைத்து தயாரிப்பு பணிகளையும் தனியாக கவனிப்பது சிரமமாக இருக்கும் என்பதால், அந்தப் பொறுப்புகளை ஷாலினி கவனிக்குமாறு அவர் கேட்டதாகவும், அதற்கு ஷாலினி சம்மதம் தெரிவித்ததாகவும் திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதன் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாலினி மீண்டும் திரைப்படத் துறையில் செயல்பட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இருப்பினும், அஜித் அல்லது ஷாலினி தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
English Summary
Is Shalini making a comeback to cinema She has reportedly agreed to Ajith suggestion