அப்பா ரூட்டில் மகன்? ஹீரோவாக அறிமுகமாகிறாரா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்?
Following in his father footsteps Is Vijay son Jason Sanjay making his debut as a hero
முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படமான 'சிக்மா' ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், 'சிக்மா' படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்ற தகவல்கள் திரையுலகில் பேசப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், சிறுவயதில் 'போக்கிரி', 'வேட்டைக்காரன்' உள்ளிட்ட படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்திருந்தார். பின்னர் வெளிநாட்டில் திரைப்படம் தொடர்பான படிப்பை முடித்த அவர், நடிகராக அல்லாமல் இயக்குநராக தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகப்படமாக உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு முழுவதும் ஜேசன் சஞ்சயின் பணியாற்றும் விதம் குறித்து படக்குழுவினர் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நடிகர் சந்தீப் கிஷன் பல்வேறு பேட்டிகளில், "பெரிய நட்சத்திரத்தின் மகன் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக ஜேசன் செயல்படுகிறார்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் விரைவில் நடிகராகவும் அறிமுகமாகவிருக்கிறார் என்ற புதிய தகவல் திரையுலகில் பரவி வருகிறது. அதன்படி, தயாரிப்பாளர் ஜி.கே. தமிழ்க்குமரன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் அந்தப் படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 'சிக்மா' திரைப்படம் வெளியான பிறகே இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகலாம் என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், அவர் முதலில் இயக்குநராக அறிமுகமானது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் நடிகராக களமிறங்கினால், அது விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், 'சிக்மா' படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிய பிறகும், ஜேசன் சஞ்சய்க்கு விஜய் பொதுவெளியில் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன.
எனினும், ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகிறார் என்ற தகவல் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போது பரவி வரும் தகவல்கள் திரையுலக வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Following in his father footsteps Is Vijay son Jason Sanjay making his debut as a hero