கல்விக்கண் திறந்த காமராஜரின் 124-வது பிறந்தநாள்...! சென்னை அண்ணா சாலையில் திருவுருவச் சிலைக்கு முதல்வர் விஜய் நெஞ்சார்ந்த மரியாதை...!
124th birth anniversary Kamaraj who opened eyes education Chief Minister Vijay pays heartfelt tribute statue deity Anna Salai Chennai
மக்களின் மனதில் அழியாத இடம்பிடித்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், கர்மவீரர் எனப் போற்றப்படுபவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக அமைப்பினர் மற்றும் ஏராளமானோர் மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தி அவரது சேவைகளை நினைவுகூர்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர்மாலை அணிவித்து, மலர்தூவி ஆழ்ந்த மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி, அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தி, கர்மவீரர் காமராஜரின் தன்னலமற்ற பொதுச்சேவையையும் கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணியையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
English Summary
124th birth anniversary Kamaraj who opened eyes education Chief Minister Vijay pays heartfelt tribute statue deity Anna Salai Chennai