தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்...! சற்றே உயர்ந்தது சவரன் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன...?
Gold price changes again price sovereigns increased slightly What price situation today
சர்வதேச பொருளாதார நிலவரம், உலக நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றம் மற்றும் முதலீட்டு சந்தையின் மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது.கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.13,180-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1,06,800-க்கு விற்பனையான நிலையில், 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ரூ.1,06,400-ஆக இருந்தது.
13-ஆம் தேதி ரூ.1,05,600-ஆக குறைந்த தங்கம், 14-ஆம் தேதி மேலும் சரிந்து ரூ.1,05,200-க்கு விற்பனையானது. இன்று அந்த சரிவிலிருந்து மீண்டு ரூ.1,05,440-ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக மாற்றத்துடன் பதிவாகி வருகிறது. 10-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.245-ஆக இருந்த வெள்ளி, 11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் ரூ.240-ஆக நிலைத்திருந்தது. 14-ஆம் தேதி ரூ.235-ஆக குறைந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.240-க்கு உயர்ந்துள்ளது.
English Summary
Gold price changes again price sovereigns increased slightly What price situation today